மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை அதிகாரி ஆய்வு
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை அதிகாரி ஆய்வு செய்தார்
தா.பழூர்
சமீப நாட்களாக பெய்த தொடர் மழை வெள்ளத்தின் காரணமாக அரியலூர் மாவட்டம் தா.பழூர், கோடாலிகருப்பூர், சோழமாதேவி உதயநத்தம் உள்ளிட்ட ஊராட்சிகளில் சுமார் 2 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் நெல் வயல்களில் தண்ணீர் தேங்கி இன்னும் வடியாமல் நிற்கின்றன. இதனால், பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வேளாண்மை துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்பேரில் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் பழனிச்சாமி மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது முற்றிலும் சேதமடைந்த நெல்வயல்கள் கணக்கெடுக்கப்பட்டு அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு இழப்பீடு பெற்று தரப்படும் என்று விவசாயிகளிடம் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது வட்டார வேளாண்மை இயக்குனர் அசோகன், வேளாண்மை அலுவலர் செல்வகுமார், உதவி வேளாண்மை அலுவலர் செல்வ பிரியா ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story