தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 24 Nov 2021 8:13 PM GMT (Updated: 24 Nov 2021 8:13 PM GMT)

தினத்தந்தி புகார் பெட்டி

குரங்குகளால் பொதுமக்கள் அச்சம்
மண்டைக்காடு செக்காரவிைள பகுதியில் குரங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. அவை அந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்து உணவு பொருட்களை எடுத்துச் செல்வது, மரங்களில் உள்ள பழங்களை சேதப்படுத்துவது, பொது  மக்களை அச்சுருத்தி வருகிறது. இதனால், அந்த பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வருவதுடன், அச்சத்தில் உள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
                                       -ராஜீவ், மண்டைக்காடு.
குப்பைகள் அகற்றப்படுமா? 
கல்லுக்கூட்டம் பஞ்சாயத்துக்குட்பட்ட 12-வது வார்டில் அந்த பகுதி மக்களின் பயன்பாட்டுக்காக மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டிஉள்ள பகுதியில் அரசு பள்ளி, மீன்சந்தை, பஞ்சாயத்து மற்றும் கிராம நிர்வாக அலுவலகங்கள் உள்ளன. அந்த பகுதியில் வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகளை மூடைகளாக கட்டி நீர்தேக்க தொட்டியின் அடிப்பகுதியில் வைத்துள்ளனர். இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. எனவே, நீர்தேக்க தாட்டிக்கு அடியில் வைக்கப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்க எடுப்பார்களா?.
                                         -முகமது சபீர், குளச்சல்.
சாலை சீரமைக்கப்படுமா?
தடிக்காரன்கோணத்தில் இருந்து கீரிப்பாறை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை பல இடங்களில் சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி உயிரிழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்ைக எடுப்பார்களா?.
                                -மணிகண்டன், வாழையத்துவயல்.
மக்கள் பயன்பாட்டுக்கு வருமா?
புத்தளம் பேரூராட்சிக்குட்பட்ட சொத்தவிளையில் கடந்த 2018-ம் ஆண்டு ரூ.20 லட்சம் செலவில் அந்த பகுதி மக்கள் பயன்பாட்டுக்காக மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி கட்டப்பட்டது. ஆனால், இதுவரை அந்த நீர்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் குடிநீருக்காக பரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, பொதுமக்கள் நலன்கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மேல்நிலை நீர்தேக்க தொட்டியை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவார்களா? 
 -ஆர். ராதாகிருஷ்ணன், சொத்தவிளை.
போக்குவரத்து நெருக்கடி
குளச்சலில் காமராஜர் பஸ்நிலையம் உள்ளது. இந்த பஸ்நிலையத்துக்குள் தனியார் வாகனங்கள் அதிகளவில் நிறுத்தப்படுகிறது. இதனால், பஸ்நிலையத்தில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதுடன், பயணிகளும் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பஸ்நிலையத்துக்குள் தனியார் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                  -து.அரசுமணி, சேனாப்பள்ளி.
காட்சி பொருளான குடிநீர் தொட்டி
கருங்கல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட தட்டான்விளை சந்திப்பில் ஒரு குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டி கடந்த 6 மாதமாக பயன்படுத்தப்படாமல் காணப்படுகிறது. இதனால், அந்த பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, குடிநீர் தொட்டியை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                          -ஜெகன், தெருவுக்கடை.

Next Story