போராட்டத்திற்கு திரண்ட இந்து அமைப்பினர் 160 பேர் கைது


போராட்டத்திற்கு திரண்ட இந்து அமைப்பினர்  160 பேர் கைது
x
தினத்தந்தி 25 Nov 2021 1:50 AM IST (Updated: 25 Nov 2021 1:50 AM IST)
t-max-icont-min-icon

மண்டைக்காட்டில் போராட்டத்திற்கு திரண்ட இந்து அமைப்பை சேர்ந்த 160 பேர்கைது செய்யப்பட்டனர்.

மணவாளக்குறிச்சி, 
மண்டைக்காட்டில் போராட்டத்திற்கு திரண்ட இந்து அமைப்பை சேர்ந்த   160 பேர்கைது செய்யப்பட்டனர்.
போராட்டத்துக்கு திரண்டனர்
பகவதி அம்மன் கோவிலில் தீ விபத்து நடந்ததை தொடர்ந்து தேவபிரசன்னம் மற்றும் வாஸ்து பார்க்கப்பட்டது. தேவபிரசன்னம் மற்றும் வாஸ்து பார்த்ததில் கூறியபடி, மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருப்பணிகளை தொடங்க வேண்டும் என வலியுறுத்தி குமரி மாவட்ட இந்து அமைப்பினர் கோவில் முன் ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அறிவித்து இருந்தனர். 
அதன்படி நேற்று காலை 9 மணி அளவில் இந்து முன்னணி கோட்ட செயலாளர் மிசா சோமன், மண்டைக்காடு தேவி சேவா சங்க பொதுச்செயலாளர் வக்கீல் சிவகுமார், மாவட்ட இந்து கோவில்களின் கூட்டமைப்பு அமைப்பாளர் ஸ்ரீபதி, துணை அமைப்பாளர் வக்கீல் வேல்தாஸ், பா.ஜனதா மாவட்ட முன்னாள் தலைவர் தர்மபுரம் கணேசன், வக்கீல் பிரிவு துணை தலைவர் ஆறுமுகம், ஹைந்தவ சேவா சங்க பொதுச்செயலாளர் ரெத்ன பாண்டியன், பெரிய சக்கர தீ வெட்டி குழு தலைவர் முருகன், மாவட்ட பா.ஜனதா மகளிர் அணி தலைவர் மகேஸ்வரி முருகேசன், மாவட்ட பி.எம்.எஸ்.தலைவர் முருகேசன், ஒன்றிய இந்து முன்னணி தலைவர் ராஜேஷ், துணைத்தலைவர் பிரதீப்குமார், அய்யப்பா சேவா சமாஜம் மாவட்ட அமைப்பாளர் நாஞ்சில் ராஜா, ஆர்.எஸ்.எஸ்.நிர்வாகிகள் ராஜாராம், ராஜேந்திரன் உள்பட இந்து அமைப்பினர் கோவில் அருகே உள்ள பருத்திவிளை சந்திப்பில் திரண்டனர். 
160 பேர் கைது
பின்னர் அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த கோவில் நோக்கி செல்ல முற்பட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
24 பெண்கள் உள்பட 160 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் குளச்சலில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் அனை வரும் விடுவிக்கப்பட் டனர்.
போலீஸ் டி.ஐ.ஜி.
அந்த பகுதியில் பிரச்சினை ஏற்படுவதை தடுக்கும் விதமாக காலையில் இருந்தே லட்சுமிபுரம், மண்டைக்காடு சந்திப்பு, பிள்ளையார்கோவில் சந்திப்பு, வெட்டுமடை, படர்நிலம், கூட்டுமங்கலம் ஆகிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இந்த பணியில் குளச்சல் துணை சூப்பிரண்டு தங்கராமன் தலைமையில் 500 போலீசார்  ஈடுபட்டனர்.  பாதுகாப்பு ஏற்பாடுகளை நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநவ், குமரி போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் ஆகியோர் பார்வையிட்டனர்.

Next Story