மாவட்ட செய்திகள்

பஸ்சில் இருந்து தவறி விழுந்த அமரர் ஊர்தி டிரைவர் பலி + "||" + death

பஸ்சில் இருந்து தவறி விழுந்த அமரர் ஊர்தி டிரைவர் பலி

பஸ்சில் இருந்து தவறி விழுந்த அமரர் ஊர்தி டிரைவர் பலி
அருப்புக்கோட்டை அருகே பஸ்சில் இருந்து தவறி விழுந்த அமரர் ஊர்தி டிரைவர் பலியானார்.
அருப்புக்கோட்டை, 
அருப்புக்கோட்டை அருகே ஆமணக்குநத்தம் கிராமத்தை சேர்ந்த தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் சின்னசாமி. இவரது மகன் திலீப்குமார் (வயது 35). மதுரையில் அமரர் ஊர்தி டிரைவராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று திலீப்குமார் அருப்புக்கோட்டை செல்வதற்காக ஆமணக்குநத்தம் கிராமத்தில் இருந்து தனியார் பஸ்சில் ஏற முயன்றதாகவும் அப்போது திடீரென பஸ்சில் இருந்து தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த திலீப்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து பந்தல்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. திருவரங்குளம் அருகே கார் மீது மோட்டார் சைக்கிள் மோதி 2 வாலிபர்கள் பலி
திருவரங்குளம் அருகே கார் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.
2. பெருங்களூர் அருகே வரத்து வாரி தண்ணீரில் தவறி விழுந்து கொத்தனார் பலி
பெருங்களூர் அருகே வரத்துவாரி தண்ணீரில் தவறி விழுந்து கொத்தனார் பரிதாபமாக இறந்தார்.
3. மின்சாரம் தாக்கி மாணவன் உள்பட 2 பேர் பலி
பெண்ணாடம், பண்ருட்டியில் மின்சாரம் தாக்கி மாணவன் உள்பட 2 பேர் பலியாகினர்.
4. மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி
மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பரிதாபமாக இறந்தார்.
5. பாதாள சாக்கடையில் விழுந்து என்ஜினீயர் பலி
மதுரை பாதாள சாக்கடையில் விழுந்து என்ஜினீயர் பரிதாபமாக இறந்தார்.