மாவட்ட செய்திகள்

பள்ளி வளாகத்தில் உடற்கல்வி ஆசிரியர் தற்கொலை + "||" + Suicide

பள்ளி வளாகத்தில் உடற்கல்வி ஆசிரியர் தற்கொலை

பள்ளி வளாகத்தில் உடற்கல்வி ஆசிரியர் தற்கொலை
அருப்புக்கோட்டையில் பள்ளிக்கூட வளாகத்தில் உடற்கல்வி ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதற்கான காரணம் குறித்து அவர் எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றினார்கள்.
அருப்புக்கோட்டை, 
அருப்புக்கோட்டையில் பள்ளிக்கூட வளாகத்தில் உடற்கல்வி ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதற்கான காரணம் குறித்து அவர் எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றினார்கள்.
பள்ளி வளாகத்தில் தற்கொலை
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பாண்டுரங்கன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 58). இவர், அரசு உதவி பெறும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 32 வருடங்களாக உடற்கல்வி ஆசிரியராகவும், பின்னர் உடற்கல்வி இயக்குனராகவும் பணிபுரிந்து வந்தார். 
 இந்த நிலையில் நேற்று காலையில் பள்ளி வளாகத்தில் உள்ள ஒரு அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.
 இதைப்பார்த்து சக ஆசிரியர்கள், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். 
ஆசிரியர் ராமகிருஷ்ணனின் உடலை மீட்டு பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடிதம் சிக்கியது 
 இதுகுறித்து போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் கடன் பிரச்சினை காரணமாக ஆசிரியர் ராமகிருஷ்ணன் தற்கொலை செய்தது தெரியவந்தது.
மேலும் அவர் எழுதியதாக ஒரு கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர். மனக்குழப்பம் மற்றும் கடன் பிரச்சினை காரணமாக இந்த முடிவை எடுக்கிறேன் என அவர் அதில் எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். 
பள்ளி வளாகத்தில் ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரது தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்திலும் விசாரணையை தொடர்ந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. காருக்கு இன்சூரன்ஸ் தொகை தராததால் புதுமாப்பிள்ளை தற்கொலை
விபத்தில் சிக்கிய காருக்கு இன்சூரன்ஸ் தொகை தர மறுத்ததால் வாலிபர் தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக நடவடிக்கை கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
2. தனியார் பள்ளி ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை
துறையூர் அருகே தனியார் பள்ளி ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
3. டிரைவர் உள்பட 2 பேர் தற்கொலை
வெவ்வேறு சம்பவங்களில் டிரைவர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
4. தந்தை இறந்த சோகத்தில் பிளஸ்-1 மாணவி தற்கொலை
தந்தை இறந்த சோகத்தில் பிளஸ்-1 மாணவி தற்கொலை
5. தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
ரிஷிவந்தியம் அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.