சட்ட விழிப்புணர்வு புகைப்பட கண்காட்சி
தஞ்சை கோர்ட்டு வளாகத்தில் புகைப்பட கண்காட்சியை மாவட்ட முதன்மை நீதிபதி மதுசூதனன் தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர்
தஞ்சை கோர்ட்டு வளாகத்தில் புகைப்பட கண்காட்சியை மாவட்ட முதன்மை நீதிபதி மதுசூதனன் தொடங்கி வைத்தார்.
புகைப்பட கண்காட்சி
இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டும், தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டும் சட்ட சேவை கொண்டாடும் விதமாக சட்ட விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்படியும். தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின்படியும் இந்த முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக தஞ்சை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மாபெரும் சட்ட விழிப்புணர்வு புகைப்பட கண்காட்சி கோர்ட்டு வளாகத்தில் நடைபெற்றது. இதனை மாவட்ட முதன்மை நீதிபதி மதுசூதனன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தார்.
சட்டப்பணிகள் ஆற்றிய சேவை
இதில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயல்பாடுகள், சாதனைகள், மக்கள் பணிகள், சேவைகள், மற்றும் மாவட்ட காவல்துறை நிர்வாகம், குழந்தைகள் பாதுகாப்பு அலகு, தொழிலாளர் நலத்துறை, சமூகநலத்துறை, சிறைத்துறை நிர்வாகங்களுடன் இணைந்து மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு ஆற்றிய பணிகள், சட்ட விழிப்புணர்வு முகாம்கள் ஆகியன காட்சி படுத்தப்பட்டது. இதனை வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள், மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டனர். இதில் தொழிலாளர் நலத்துறையை சார்ந்த பயனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.
இந்த விழாவில் மாவட்ட 2-வது கூடுதல் நீதிபதி மலர்விழி, மாவட்ட குடும்ப நல நீதிமன்ற நீதிபதி மலர்விழி, இன்றியமையாப்பண்டங்கள் சட்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி சண்முகவேல், மோட்டார் வாகன விபத்து நீதிபதி ஜெயசிங், விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி சுந்தர்ராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பு நீதிபதி சுதா செய்திருந்தார்.
Related Tags :
Next Story