ஊழல் தடுப்பு படை போலீசாரின் சோதனைக்கு உள்ளான அதிகாாிகளின் வீடுகளில் சிக்கியது என்ன?


ஊழல் தடுப்பு படை போலீசாரின் சோதனைக்கு உள்ளான  அதிகாாிகளின் வீடுகளில் சிக்கியது என்ன?
x
தினத்தந்தி 25 Nov 2021 2:30 AM IST (Updated: 25 Nov 2021 2:30 AM IST)
t-max-icont-min-icon

ஊழல் தடுப்பு படை போலீசாரின் சோதனைக்கு உள்ளான அதிகாரிகளின் வீடுகளில் சிக்கியது என்ன? என்பது குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

பெங்களூரு:

ஊழல் தடுப்பு படை சோதனை

  கர்நாடகத்தில் நேற்று 15 அரசு அதிகாரிகளின் வீடுகளில் ஊழல் தடுப்பு படை போலீசார் சோதனை நடத்தி இருந்தனர். இந்த சோதனையின் போது அதிகாரிகளின் வீடுகளில் சிக்கிய நகைகள், பணம், ஆவணங்கள் குறித்து ஊழல் தடுப்பு படை போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

  கலபுரகி பொதுப்பணித்துறை என்ஜினீயர் சாந்தனகவுடா பிராதர் வீட்டில் 2 வீடுகளின் சொத்து பத்திரங்கள், பெங்களூரு நகரில் ஒரு வீடு, 3 கார்கள், ஒரு பள்ளிபஸ், ஒரு மோட்டார் சைக்கிள், 2 டிராக்டர், ரூ.52½ லட்சம் ரொக்கம், 10 கிராம் தங்க நகைகள், 36 ஏக்கர் விவசாய நிலம், ரூ.15 லட்சத்திற்கான இதர பொருட்கள் சிக்கியுள்ளது.

  கதக் வேளாண் துறை இணை இயக்குனரான ருத்ரேசப்பாவுக்கு சிவமொக்காவில் 2 வீடுகள், 4 வீட்டு மனைகள், 9 கிலோ 400 கிராம் தங்க நகைகள், 3 மோட்டார் சைக்கிள்கள், 2 சொகுசு கார்கள், ரூ.15.94 லட்சம், 8 ஏக்கர் விவசாய நிலம், ரூ.20 லட்சம் இதர பொருட்கள் இருப்பது தெரியவந்து உள்ளது. மண்டியா மாவட்ட அதிகாரி சீனிவாசுக்கு மைசூருவில் ஒரு வீடு, மைசூருவில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு, மைசூருவில் 2 வீட்டுமனைகள், மைசூருவில் 4 ஏக்கர் நிலம், ஒரு பண்ணை வீடு, 2 கார்கள், 2 மோட்டார் சைக்கிள்கள், 8 கிலோ 840 கிராம் வெள்ளி, ஒரு கிலோ தங்கம், ரூ.9.85 லட்சம் ரொக்கம், வங்கிகளில் ரூ.22 லட்சம் கையிருப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள்

  மங்களூரு அதிகாரி லிங்கேகவுடாவிடம் மங்களூருவில் ஒரு வீடு, சாம்ராஜ்நகர் மற்றும் மங்களூருவில் வீட்டுமனைகள், 2 கார்கள், ஒரு மோட்டார் சைக்கிள், ஒரு கிலோ வெள்ளி, ரூ.10 லட்சம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பெங்களூரு நகர அதிகாரி நாகராஜிக்கு பெங்களூருவில் ஒரு வீடு, ஒரு வீட்டுமனை, நெலமங்களாவில் ஒரு வீடு, 11 ஏக்கர் விவசாய நிலம், நெலமங்களாவில் ஒரு வணிக வளாகம், 3 கார்கள், 7 கிலோ வெள்ளி பொருட்கள், 176 கிராம் தங்கநகைகள், ரூ.43 லட்சம் ரொக்கம் இருப்பது தெரியவந்து உள்ளது.

  பெங்களூரு பிசியோதெரபிஸ்ட் ராஜசேகரிடம் எலகங்காவில் 2 அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள், ஒரு தனியார் மருத்துவமனை கட்டிடம், எலகங்காவில் ஒரு வீட்டுமனை, ஒரு கார், ஒரு மோட்டார் சைக்கிள், ரூ.4 லட்சம் ரொக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

  மாநகராட்சி ஊழியர் மாயண்ணாவுக்கு பெங்களூருவில் 4 வீடுகள், 6 வீட்டுமனைகள், 2 ஏக்கர் விவசாய நிலம், ஒரு கார், 2 மோட்ார் சைக்கிள், 600 கிராம் தங்கம், ரூ.59 ஆயிரம் ரொக்கம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. பல்லாரி அதிகாரி சிவானந்திடம் மண்டியாவில் ஒரு வீடு, பெஙக்ளூருவில் ஒரு வீட்டுமனை, ஒரு கார், 2 மேட்டார் சைக்கிள்கள், ரூ.8.22 லடசம் ரொக்கம் இருப்பது தெரியவந்து உள்ளது.

பெட்ரோல் விற்பனை நிலையம்

  பெலகாவி அதிகாரி மஸ்திக்கு 2 வீடுகள், 4 வீட்டுமனைகள், 4 கார்கள், 6 மோட்டார் சைக்கிள்கள், 263 கிராம் தங்கம், 945 கிராம் வெள்ளி நகைகள், ரூ.5 லட்சம் இதர பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. பெலகாவி கெஸ்காம் அதிகாரி நேதாஜி கிராஜ் பட்டீலுக்கு ஒரு வீடு, 2 வீட்டுமனைகள், ஒரு கார், ஒரு மோட்டார் சைக்கிள், 239 கிராம் தங்கம், 1 கிலோ 803 கிராம் வெள்ளி, ரூ.38 ஆயிரம் ரொக்கம், ரூ.20 லட்சம் மதிப்பிலான இதர பொருட்கள் இருப்பது தெரியவந்து உள்ளது.

  பெங்களூரு தொட்டபள்ளாப்புரா அதிகாரி லட்சுமி நரசிம்மய்யாவிடம் இருந்து 5 வீடுகள், 6 வீட்டுமனைகள், 25 குண்டே நிலம், 765 கிராம் தங்கம், 15 கிலோ வெள்ளி, ஒரு கார், 2 மோட்டார் சைக்கிள், ரூ.1.13 லட்சம் ரொக்கம் சிக்கி உள்ளது. பெங்களூரு அரசு அதிகாரி வாசுதேவுக்கு பெங்களூரு நகரில் 5 வீடுகள், நெலமங்களாவில் 4 வீடுகள், பெங்களூரு நகரில் 8 வீட்டுமனைகள், நெலமங்களா, மாகடியில் 10 ஏக்கர் விவசாய நிலம், 850 கிராம் தங்கம், 9 கிலோ 500 கிராம் வெள்ளி, ரூ.15 லட்சம் ரொக்கம் சிக்கி உள்ளது.

  பெங்களூரு நந்தினி பால் மேலாளர் கிருஷ்ணா ரெட்டிக்கு சொந்தமாக 3 வீடுகள், 9 வீட்டுமனைகள், சிந்தாமணியில் 5 ஏக்கர் விவசாய நிலம், ஒசக்கோட்டையில் ஒரு பெட்ரோல் விற்பனை நிலையம், 383 கிராம் தங்கம், 3 கிலோ 400 கிராம் வெள்ளி, ரூ.3 லட்சம் ரொக்கம் சிக்கியுள்ளது.

Next Story