இன்று நடைபெறும் 11-வது கட்ட முகாமில் 1 லட்சத்து 35 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு-கலெக்டர் கார்மேகம் தகவல்

இன்று நடைபெறும் 11-வது கட்ட முகாமில் 1 லட்சத்து 35 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு-கலெக்டர் கார்மேகம் தகவல்
x
தினத்தந்தி 25 Nov 2021 3:03 AM IST (Updated: 25 Nov 2021 3:03 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் இன்று(வியாழக்கிழமை) நடைபெறும் 11-வது கட்ட முகாமில், 1 லட்சத்து 35 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

சேலம்:
சேலம் மாவட்டத்தில் இன்று(வியாழக்கிழமை) நடைபெறும் 11-வது கட்ட முகாமில், 1 லட்சத்து 35 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதையொட்டி 10 கட்ட மெகாதடுப்பூசி முகாம் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டு உள்ளது. 
இந்த நிலையில் 11-வது கட்ட தடுப்பூசி முகாம் இன்று(வியாழக்கிழமை) நடைபெறுகிறது. சேலம் மாவட்டத்தில் இந்த முகாம் ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
1.35 லட்சம் பேர்
சேலம் மாவட்டத்தில் இதுவரை 4 லட்சத்து 52 ஆயிரத்து 277 பேருக்கு முதல் தவணை, 3 லட்சத்து 68 ஆயிரத்து 144 ேபருக்கு 2-ம் தவணை என மொத்தம் 8 லட்சத்து 20 ஆயிரத்து 421 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இன்று 11-வது தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. 
இதில் 1 லட்சத்து 35 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. காலை 7 முதல் இரவு 7 மணி வரை முகாம் நடைபெறும்.
இதற்காக 1,392 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 18 ஆயிரத்து 500 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது 3 லட்சத்து 72 ஆயிரத்து 290 கோவிஷீல்டும், 1 லட்சத்து 11 ஆயிரத்து 185 கோவேக்சின் தடுப்பூசியும் இருப்பில் உள்ளன. எனவே தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் இந்த முகாமை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story