மாவட்ட செய்திகள்

பள்ளிபாளையம், எருமப்பட்டியில்மதுபாட்டில்கள் விற்ற 2 பேர் கைது + "||" + 2 arrested

பள்ளிபாளையம், எருமப்பட்டியில்மதுபாட்டில்கள் விற்ற 2 பேர் கைது

பள்ளிபாளையம், எருமப்பட்டியில்மதுபாட்டில்கள் விற்ற 2 பேர் கைது
பள்ளிபாளையம், எருமப்பட்டியில் மதுபாட்டில்கள் விற்ற 2 பேர் கைது
பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் போலீசார் காவிரி பஸ் நிறுத்தம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு ஒருவர் கையில் பையுடன் நின்று கொண்டிருந்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த நபரிடம் இருந்த பையை வாங்கி சோதனை செய்தனர். அதில் 23 மதுபாட்டில்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த நபரிடம் விசாரணை நடத்தியதில் அவர் காவிரி ஆர்.எஸ். பகுதியை சேர்ந்த கோட்டைசாமி (வயது 44) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 23 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். 
எருமப்பட்டி கணேசன் தெருவை சேர்ந்தவர் சந்துரு (50). இவர் எருமப்பட்டி பஸ் நிலையம் பின்புறம் உள்ள புதரில் மதுபாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்வதாக எருமப்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பூபதி மற்றும் போலீசார் அங்கு சென்று மது விற்ற சந்துருவை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 4 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. எருமப்பட்டியில் தச்சு தொழிலாளி வீட்டில் 8¼ பவுன் நகை திருட்டு
எருமப்பட்டியில் தச்சு தொழிலாளி வீட்டில் 8¼ பவுன் நகை திருட்டு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.