ராமநாதபுரத்தில் இருந்து கர்நாடகாவுக்கு லாரியில் கடத்த முயன்ற 22 டன் ரேஷன் அரிசி பறிமுதல் டிரைவர்கள் 2 பேர் கைது

ராமநாதபுரத்தில் இருந்து கர்நாடகாவுக்கு  லாரியில் கடத்த முயன்ற  22 டன் ரேஷன் அரிசி பறிமுதல்  டிரைவர்கள் 2 பேர் கைது
x
தினத்தந்தி 25 Nov 2021 10:27 AM IST (Updated: 25 Nov 2021 10:27 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் இருந்து கர்நாடகாவுக்கு லாரியில் கடத்த முயன்ற 22 டன் ரேஷன் அரிசியை கிருஷ்ணகிரி அருகே போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கிருஷ்ணகிரி:
ராமநாதபுரத்தில் இருந்து கர்நாடகாவுக்கு லாரியில் கடத்த முயன்ற 22 டன் ரேஷன் அரிசியை கிருஷ்ணகிரி அருகே போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
வாகன சோதனை
கிருஷ்ணகிரி மாவட்ட உணவுபொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர்கள், சிவசாமி, முரளி ஆகியோர் நேற்று கிருஷ்ணகிரி சோதனைச்சாவடி அருகே வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். 
அதில் 440 மூட்டைகளில், 22 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இது குறித்து டிரைவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள், மதுரை மாவட்டம் யானைக்கல் பகுதியை சேர்ந்த டிரைவர் மணிகண்டன் என்கிற தங்கமலை (வயது 40), தஞ்சாவூர் கள்ளக்குடியை சேர்ந்த டிரைவர் டேவிட்பிரான்சிஸ் (35) ஆகியோர் என்பதும், ராமநாதபுரம் பகுதியில் இருந்து ரேஷன் அரிசியை வாங்கி கர்நாடக மாநிலத்திற்கு கடத்த முயன்றதும் தெரிந்தது. 
2 பேர் கைது
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் ரேஷன் அரிசியுடன் லாரியையும் பறிமுதல் செய்தனர்.  ரேஷன் அரிசி கடத்தலுக்கு உறுதுணையாக இருந்த ராமநாதபுரத்தை சேர்ந்த ராமஜெயம், செந்தில், வீரமணி, வடிவேல்முருகன், கணேசன் உள்ளிட்ட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story