மாவட்ட செய்திகள்

அம்மையார்குப்பத்தில் ரூ.1½ லட்சம் ஐம்பொன் சிலை திருட்டு + "||" + Rs 10 lakh iPhone idol stolen in Ammayarkuppam

அம்மையார்குப்பத்தில் ரூ.1½ லட்சம் ஐம்பொன் சிலை திருட்டு

அம்மையார்குப்பத்தில் ரூ.1½ லட்சம் ஐம்பொன் சிலை திருட்டு
அம்மையார்குப்பத்தில் ரூ.1½ லட்சம் ஐம்பொன் சிலையை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த அம்மையார்குப்பம் சாந்த மலை அடிவாரத்தில் வாரியார் சுவாமிகள் மடம் உள்ளது. இந்த மடத்தில் ரூ.1½ லட்சம் மதிப்பிலான ஐம்பொன்னாலான வாரியார் சாமி சிலை இருந்தது.

நேற்று காலை மடத்தின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அந்த பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உள்ளே சென்று பார்த்தபோது அங்கு இருந்த ரூ.1½ லட்சம் மதிப்பிலான வாரியார் சாமிகளின் ஐம்பொன்னால் ஆன சிலை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து ஆர்.கே.பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலையை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.