9-ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது


9-ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 25 Nov 2021 3:50 PM IST (Updated: 25 Nov 2021 3:50 PM IST)
t-max-icont-min-icon

9-ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் நகரில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவியை கடந்த 18-ந்தேதி முதல் காணவில்லை என்று அவரது பெற்றோர் திருவள்ளூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் திருவள்ளூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நாகலிங்கம் சப்-இன்ஸ்பெக்டர் மாலா மற்றும் போலீசார் அந்த மாணவியை தேடி வந்தனர்.

இந்தநிலையில் திருவண்ணாமலை மாவட்டம் தூசி அருகே உள்ள அனுமந்த பேட்டை கிராமத்தில் அவர் இருப்பதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் விரைந்து சென்று மாணவியை மீட்டனர். போலீஸ் விசாரணையில் தனது செல்போன் மூலம் 1 மாதத்துக்கு முன் அறிமுகமான திருவண்ணாமலை மாவட்டம் தூசி அருகே உள்ள அனுமந்த பேட்டை கிராமத்தில் வசிக்கும் கூலித்தொழிலாளி கோபி (21) யை அனுமந்தபேட்டை கோவிலில் திருமணம் செய்து குடித்தனம் நடத்துவது தெரியவந்தது. இதையடுத்து திருவள்ளூர் டவுன் போலீசார் 14 வயது சிறுமியிடம் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதாக போக்சோ சட்டத்தில் கோபியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 14 வயது சிறுமியை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் உடல் பரிசோதனை செய்து காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Next Story