மாவட்ட செய்திகள்

அங்கன்வாடி மையத்திற்கு அடிப்படை வசதி + "||" + Basic facilities for Anganwadi Center

அங்கன்வாடி மையத்திற்கு அடிப்படை வசதி

அங்கன்வாடி மையத்திற்கு அடிப்படை வசதி
அங்கன்வாடி மையத்திற்கு அடிப்படை வசதி
அங்கன்வாடி மையத்திற்கு அடிப்படை வசதி
 திருப்பூர்  இடுவாய் சாய்பாபா காலனியில் உள்ள அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு  2 ஆண்டு ஆகிவிட்டது. இந்த மையத்தில்   25 குழந்தைகள் உள்ளனர். ஆனால் இந்த மையத்திற்கு இதுவரை குடிநீர் இணைப்பு வழங்கவில்லை. இதனால் சமைப்பதற்கும், குடிக்கவும் வெளியில் இருந்து தண்ணீர் எடுத்து வர வேண்டி உள்ளது. எனவே அங்கன்வாடி மையத்திற்கு குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடைந்த  மின்கம்பத்தை மாற்றப்படுமா

திருப்பூர் அனுப்பர்பாளையம்  தண்ணீர்பந்தல் காலனி சிக்னல் பக்கதில் உள்ள மின் கம்பமானது 3 தினங்களுக்கு முன் கனரக வாகனம்    மோதியதால் மின்கம்பம் அடியில் சேதம் அடைந்தது. சிமெண்ட்டு காரை பெயர்ந்து கம்பி வெளியே தெரிகிறது. இதனால் அந்த மின்கம்பம்  விழந்துவிடும் அபாய நிலையில் உள்ளது.  இந்த சாலையில் தினமும் அதிக எண்ணிக்கையில்  வாகனம் கடந்து செல்கிறது.  எனவே  நடவடிக்கை மேற்கொண்டு பழுதான மின் கம்பத்தை சரி செய்து அசம்பாவித சம்பவம் நிகழாமல் தடுத்திடுமாறு அனைத்து பொதுமக்கள் மற்றும்  வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

சாலையோரம் தேங்கி நிற்கும் மழை நீர்
மழை பெய்து முடிந்து சுமார் ஒரு வார காலம் ஆகிவிட்ட நிலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அதுமட்டுமில்லாமல் பெரிய பள்ளம் ஒன்றும் ரோட்டில் ஏற்பட்டுள்ளது. இதனால் எதிரே வரும் வாகனங்களுக்கு தெரிவது இல்லை. மடத்துக்குளம் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலை துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. காலை மற்றும் மாலையில் பள்ளி மாணவ மாணவியர்கள் இந்த வழியைக் கடந்து செல்லும்போது எதிரே வரும் வாகனங்களால் தண்ணீர் அவர்கள் மீது படுகிறது. இதை விரைவில் சரி செய்து தருமாறு மடத்துக்குளம் பேரூராட்சி நிர்வாகத்திற்கும், மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்களின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்
சாக்கடை அடைப்பு சுத்தம் செய்யப்படுமா
உடுமலை யுஎஸ்எஸ் காலனி பகுதியில் பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்கப்படவில்லை. மேலும் இந்த பகுதியில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் இரவு நேரங்களில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. மேலும் இந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு  டெங்கு காய்ச்சல் மற்றும் நோய் பாதிப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் இந்த பகுதியில் சாக்கடை கால்வாயை சுத்தம் செய்ய வேண்டும் என அந்த  பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
கற்கள் பெயர்ந்து கிடக்கும் சாலை
 தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கவுண்டச்சிபுதுர் ஊராட்சியில் தச்சம்புதுார் சாலை மிகவும் மோசமாக கற்கள் பெயர்ந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. ஆப்பிள் ரெசிடென்ட் முன்பாக உள்ள இணைப்பு 
திருப்பூர்  சாமளாபுரம் பேரூராட்சி பள்ளபாளையம் பிள்ளையார் கோவில் வீதியில் மக்கள் குடியிருப்பு பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான வாய்க்காலில் சாக்கடை நீர் பல மாதங்களாக தேங்கி நிற்கிறது. இதனால் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் கொசு மற்றும் பலவிதமான துன்பங்களை சந்தித்து வருகிறார்கள். எனவே இந்த  வாய்க்காலில் கழிவு நீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.