புதர்மண்டி கிடக்கும் வாரசந்தை


புதர்மண்டி கிடக்கும் வாரசந்தை
x
தினத்தந்தி 25 Nov 2021 4:46 PM IST (Updated: 25 Nov 2021 4:46 PM IST)
t-max-icont-min-icon

புதர்மண்டி கிடக்கும் வாரசந்தை

குன்னத்தூர்
குன்னத்தூர் சந்தை கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் பெரிய சந்தை ஆகும். ‌இது வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும். குன்னத்தூர் சந்தையில் விளைபொருட்கள் மட்டுமன்றி ஆடு, மாடு, கோழி போன்றவை அதிக அளவில் விற்பனைக்கு வரும். தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநில வியாபாரிகள் குன்னத்தூர் சந்தைக்கு அதிக அளவில் தங்களுடைய 4 சக்கர வாகனத்தில் வந்து வெள்ளாடு மற்றும் செம்மறி, கட்டுசேவல்கள் வாங்கிச்செல்வது வழக்கம். ஆடு, மாடு, கோழி, கட்டு சேவல்கள் குன்னத்தூர் சந்தையில் பாதிக்கு மேற்பட்ட இடத்தில் விற்பனை செய்வார்கள். மீதி இடத்தில் தான் விவசாய பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வியாபாரிகள் கடை போட்டு விற்பனை செய்வார்கள்.
 ஆனால் குன்னத்தூர் சந்தையில் பாதி அளவிற்கு செடி,கொடிகள் வளர்ந்து புதர்போல் உள்ளது.மேலும் மழைநீர் குட்டை போல் தேங்கி இருப்பதால் சந்தைக்கு வரும் வியாபாரிகள் பெரும் அவதிப்படுகிறார்கள். சந்தையில் கடை போடும் சிறு வியாபாரிகள் சந்தைப்பேட்டையில் கடை போட முடியாமல் ரோட்டில் கடை போடுவதால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. ஆகவே பேரூராட்சி அதிகாரிகள் சந்தைப்பேட்டையில் செடி,கொடிகளை சுத்தம் செய்வது மழைநீர் குட்டை போல் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்குமாறு  இப்பகுதி வியாபாரிகளும், சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Next Story