பழனியில் நடிகர் மம்முட்டி நடிக்கும் சினிமா படப்பிடிப்பு ரசிகர்கள் திரண்டனர்
பழனியில் நடிகர் மம்முட்டி நடிக்கும் சினிமா படப்பிடிப்பு நடந்தது. இதையடுத்து ரசிகர்கள் திரண்டனர்.
பழனி:
மலையாள சினிமாப்பட உலகில் நடிகர் மம்முட்டி சூப்பர்ஸ்டாராக உள்ளார். இவர் நடிக்கும் பெயரிடப்படாத சினிமா படத்தின் படப்பிடிப்பு பழனி பகுதியில் நடந்து வருகிறது. இதை பிரபல இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கி வருகிறார். அதன்படி இந்த சினிமா படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக பழனி அருகே உள்ள மஞ்சநாயக்கன்பட்டி, நெய்க்காரப்பட்டி உள்ளிட்ட இடங்களில் நடந்தது.
இந்தநிலையில் நேற்று காலை பழனி அடிவாரம் சாலையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் படப்பிடிப்பு நடைபெற்றது. இதற்காக சாலையோரத்தில் கேரவன் மற்றும் படப்பிடிப்பு வேன்கள் நிறுத்தப்பட்டிருந்தது.
இதனிடையே சினிமா படப்பிடிப்புக்கு நடிகர் மம்முட்டி வந்திருக்கும் தகவல் ரசிகர்கள் மத்தியில் பரவியது. இதையடு்த்து ஏராளமான ரசிகர்கள் படப்பிடிப்பை காண திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story