வேடசந்தூர் பகுதியில் புகையிலை நாற்றுகளை விலைக்கு வாங்கும் வெளிமாவட்ட விவசாயிகள்


வேடசந்தூர் பகுதியில் புகையிலை நாற்றுகளை விலைக்கு வாங்கும் வெளிமாவட்ட விவசாயிகள்
x
தினத்தந்தி 25 Nov 2021 6:45 PM IST (Updated: 25 Nov 2021 6:45 PM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூர் பகுதியில் புகையிலை நாற்றுகளை வெளிமாவட்ட விவசாயிகள் விலைக்கு வாங்கி செல்கின்றனர்.

வேடசந்தூர்:
வேடசந்தூரில் உள்ள மத்திய புகையிலை ஆராய்ச்சி நிலையம் உள்ளது. இங்கு ஒரு கிலோ புகையிலை விதையை ரூ.1600-க்கு வாங்கி வந்து வேடசந்தூர் அருகே உள்ள லட்சுமணம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமப்பகுதியில் விவசாயிகள் நடவு செய்துள்ளனர். விதைகளை நடவு செய்த 40 முதல் 50 நாளில் நாற்று உற்பத்தியாகிறது. இந்த நாற்றுகளை வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் வாங்கி செல்கின்றனர். அதன்படி 6 ஆயிரம் நாற்றுகள் ரூ.1200-க்கு விற்கப்படுகிறது.
இது குறித்து லட்சுமணம்பட்டியை சேர்ந்த விவசாயி திருப்பதி கூறுகையில், நாற்று நடவு செய்த 120 நாளில் புகையிலை செடி விளைச்சல் ஆகிறது. குறைந்த செலவில் புகையிலை பயிரிட்டு அமோக லாபம் கிடைக்கிறது. எங்கள் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் புகையிலை நாற்றுகளை மற்ற பகுதிகளில் பயிரிட்டால் அமோக விளைச்சல் ஏற்படும். இதனால் தற்போது வெளிமாவட்ட விவசாயிகள் புகையிலை நாற்றுகளை ஆர்வத்துடன் வாங்கி சென்று பயிரிட்டு வருகிறார்கள் என்றார்.

Next Story