திருவள்ளூர் தாசில்தார் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள்


திருவள்ளூர் தாசில்தார் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 25 Nov 2021 8:24 PM IST (Updated: 25 Nov 2021 8:24 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் தாசில்தார் அலுவலகத்தில் திருவள்ளூரில் உள்ள தொழுநோயாளர் மாற்றுத்திறனாளிகள் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார். திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தொழுநோயால் பாதிக்கப்பட்ட 65 மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி, பருப்பு, ஊட்டச்சத்து உணவு, மருந்து உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாபு, தொழுநோய் துணை இயக்குனர் ஸ்ரீதேவி, திருவள்ளூர் தொழுநோயாளர் மாற்றுத்திறனாளிகள் சுய உதவிக்குழு நிறுவனர் குலோத்துங்கன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story