மாவட்ட செய்திகள்

மோப்ப நாய் உதவியுடன் கஞ்சா தேடுதல் வேட்டை + "||" + Cannabis search hunt with the help of a sniffer dog

மோப்ப நாய் உதவியுடன் கஞ்சா தேடுதல் வேட்டை

மோப்ப நாய் உதவியுடன் கஞ்சா தேடுதல் வேட்டை
வருசநாடு பகுதியில் மோப்பநாய் உதவியுடன் கஞ்சா தேடுதல் வேட்டை நடந்தது.
கடமலைக்குண்டு:

வருசநாடு போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட சிங்கராஜபுரம், பண்டாரவூத்து, பூசணூத்து உள்ளிட்ட கிராம பகுதிகளில் சிலர் வெளிமாநிலங்களில் இருந்து மொத்தமாக கஞ்சா வாங்கி அதனை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

 இதனையடுத்து தேனி போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்உமேஷ் டோங்கரே உத்தரவின் பேரில் கடந்த சில நாட்களாக வருசநாடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண்பாண்டியன் தலைமையிலான போலீசார் கஞ்சா விற்பனை தொடர்பாக ரோந்து பணி மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதன் ஒரு பகுதியாக நேற்று சிங்கராஜபுரம், பண்டாரவூத்து உள்ளிட்ட கிராமங்களில் தனியார் தோட்டம், மூலவைகை ஆற்றுப்படுகைகளில் மோப்பநாய் வெற்றி மூலம் கஞ்சா செடிகள் பயிரிட்டு இருக்கிறார்களா? என்று போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

 5 மணி நேரத்துக்கும் மேல் நடந்த சோதனையில் கஞ்சா எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.