ரூ.9½ லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்


ரூ.9½ லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்
x
தினத்தந்தி 25 Nov 2021 3:47 PM GMT (Updated: 25 Nov 2021 3:47 PM GMT)

மீஞ்சூர் அடுத்த கல்பாக்கம் ஊராட்சியில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.

மீஞ்சூர் அடுத்த கல்பாக்கம் ஊராட்சியில் அடங்கிய வெள்ளம்பாக்கம் கிராமத்தில் 600-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் நிலத்தடி நீர் உவர்ப்பாக உள்ளதால் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இவர்களது நலனை கருதி காமராஜர் துறைமுகத்தின் சார்பில் ரூ.9½ லட்சத்தில் ஒரு மணி நேரத்திற்கு 2 ஆயிரம் லிட்டர் குடிநீர் கிடைக்கும் வகையில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. அதற்கான தொடக்க விழா நேற்று நடைபெற்றது.

விழாவுக்கு மீஞ்சூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமகிருஷ்ணன், ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்றத்தலைவர் பிரியங்காதுரைராஜ், தி.மு.க. ஒன்றிய செயலாளர் ரமேஷ்ராஜ் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். பொன்னேரி எம்.எல்.ஏ. துரைசந்திரசேகர் தலைமை தாங்கி குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை இயக்கி வைத்தார். விழாவில் ஒன்றிய கவுன்சிலர் ராஜா, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பொன்னிமுத்துக்குமார், வார்டு உறுப்பினர் மோகன சுந்தரிகோபி, மகளிர் சுய உதவி குழுவினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story