மாவட்ட செய்திகள்

சேத்தியாத்தோப்பு அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை; ஆசிரியா் கைது + "||" + Teacher arrested for sexually harassing student

சேத்தியாத்தோப்பு அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை; ஆசிரியா் கைது

சேத்தியாத்தோப்பு அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை; ஆசிரியா் கைது
சேத்தியாத்தோப்பு அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை போலீசாா் கைது செய்தனா்.
சேத்தியாத்தோப்பு, 

சேத்தியாத்தோப்பு அருகே சேதியூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 25 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். மேலும் இப்பள்ளியில் தலைமை ஆசிரியர் உள்பட 2 ஆசிாியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் இப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் அசோக்குமார்(வயது 52) நேற்று முன்தினம் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தி கொண்டிருந்தார். அப்போது அவர் வகுப்பில் படிக்கும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. 
இதுபற்றி மாணவி, வீட்டுக்கு சென்று தனது தாயிடம் தெரிவித்தார். 

இதனால் ஆத்திரம் அடைந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை கைது செய்யக்கோரி புத்தூர் போலீஸ் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் கூறிய அறிவுரையின்படி சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மீனா, சப்-இன்ஸ்பெக்டர் இளவரசி ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் அசோக்குமாரை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று நார்த்தங்குடி பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த போது அசோக்குமாரை போலீசார் கைது செய்தனர். 

தொடர்புடைய செய்திகள்

1. போலீசார் விழிப்புணர்வு பிரசாரம்
வேடசந்தூர் அருகே போலீஸ் சார்பில் பாலியல் தொல்லை தொடர்பாக புகார் அளிப்பது குறித்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
2. தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை கைது செய்யாதது மனஉளைச்சலாக உள்ளது; குழந்தைகள் உதவி எண்ணில் தொடர்பு கொண்டு சிறுமி வேதனை
போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தும் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை கைது செய்யாதது மனஉளைச்சலாக உள்ளது என்று குழந்தைகள் உதவி எண்ணில் தொடர்பு கொண்டு சிறுமி கூறினார்.
3. பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை: தேடப்பட்டுவந்த பள்ளி முதல்வர் கைது
ஆசிரியரின் பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் தேடப்பட்டுவந்த பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார்.
4. கல்லூரி பேராசிரியைக்கு பாலியல் தொல்லை
நெல்லையில் கல்லூரி பேராசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாமனார் மற்றும் கணவரை போலீசார் கைது செய்தனர்.
5. தலைமை ஆசிரியைகளுக்கு பாலியல் தொல்லை; கல்வி அதிகாரி பணியிடை நீக்கம்
வேடசந்தூரில் சமூக வலைத்தளம் மூலம் தலைமை ஆசிரியைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கல்வி அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.