மாவட்ட செய்திகள்

அலுவலக உதவியாளர் பணிக்கு போலி நியமன ஆணையுடன் வந்த வாலிபரால் பரபரப்பு + "||" + Excitement by a teenager who came with a fake appointment order

அலுவலக உதவியாளர் பணிக்கு போலி நியமன ஆணையுடன் வந்த வாலிபரால் பரபரப்பு

அலுவலக உதவியாளர் பணிக்கு போலி நியமன ஆணையுடன் வந்த வாலிபரால் பரபரப்பு
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு அலுவலக உதவியாளர் பணிக்கு போலி நியமன ஆணையுடன் வந்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா களையூர் காலனியை சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் குமரேசன் (வயது 28). இவர் நேற்று காலை 10 மணியளவில் தனது தந்தை வெங்கடேசனுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.
அப்போது அவர், கலெக்டர் அலுவலகத்தில் பணியில் இருந்த கலெக்டரின் நேர்முக உதவியாளரான வி.எஸ்.மோகனை சந்தித்து விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் பணிக்கான ஆணை தனக்கு வந்துள்ளது என்று கூறி அந்த பணி நியமன ஆணையை அவரிடம் கொடுத்தார். அதை வாங்கி பார்த்தபோது, அது போலி நியமன ஆணை என்பது தெரிந்தது. இதையடுத்து அவர் உடனடியாக இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்து குமரேசனிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், பி.பி.ஏ. முடித்துள்ள குமரேசனுக்கு  சென்னை மறைமலை நகர் பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கத்தின் அடிப்படையில் குமரேசனிடம் அரசு வேலை வாங்கித்தருவதாகவும், அதற்கு பணம் செலவாகும் என்று ஏழுமலை கூறியுள்ளார்.
இதை நம்பிய குமரேசன், கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்தை ஏழுமலையிடம் கொடுத்துள்ளார். இந்த நிலையில் கடந்த 19-ந் தேதியன்று குமரேசன் வீட்டிற்கு தபாலில் பணி நியமன ஆணை வந்துள்ளது. அந்த ஆணையை போலியான முறையில் தயாரித்து குமரேசன் வீட்டிற்கு ஏழுமலை அனுப்பியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கூறிய அறிவுரைப்படி குமரேசன், விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதோடு ஏழுமலையை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தினால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :

தொடர்புடைய செய்திகள்

1. போலி ஆவணம் மூலம் ரூ.35 லட்சம் நிலத்தை அபகரித்த 3 பேர் கைது
திருவள்ளூர் அருகே போலி ஆவணம் மூலம் ரூ.35 லட்சம் நிலத்தை அபகரித்த 3 பேரை நில அபகரிப்பு தடுப்பு போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்தனர்.
2. போலி ஆவணம் மூலம் ரூ.10 லட்சம் நிலம் மோசடி; 3 பேர் கைது
போலி ஆவணம் தயாரித்து ரூ.10 லட்சம் நிலத்தை மோசடி செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
3. ஆசிரியரிடம் ரூ.43 லட்சம் மோசடி போலி வக்கீலுக்கு 6 ஆண்டு சிறை
வழக்கில் இருந்து விடுவிப்பதாக கூறி, ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் ரூ.43 லட்சம் மோசடி செய்த போலி வக்கீலுக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
4. துபாயில் இருந்து போலி பாஸ்போர்ட்டில் சென்னை வந்தவர் கைது
துபாயில் இருந்து போலி பாஸ்போர்ட்டில் சென்னை வந்தவரை குடியுரிமை அதிகாரிகள் கைது செய்தனர்.
5. துபாயில் இருந்து போலி பாஸ்போர்ட்டில் சென்னை வந்தவர் கைது
துபாயில் இருந்து போலி பாஸ்போர்ட்டில் சென்னை வந்தவரை குடியுரிமை அதிகாரிகள் கைது செய்தனர்.