5 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை


5 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
x
தினத்தந்தி 25 Nov 2021 10:18 PM IST (Updated: 25 Nov 2021 10:18 PM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யம் பகுதியில் கடல் சீற்றம் காரணமாக 5 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

வேதாரண்யம்:
வேதாரண்யம் பகுதியில் கடல் சீற்றம் காரணமாக 5 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
கடல் சீற்றம்
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், வானவன்மகாதேவி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் கடல் பகுதியில் கடும் காற்று வீசிவருகிறது. இதனால் கடல் சீற்றமாக காணப்படுகிறது.  கடல் சீற்றமாக காணப்படுவதாலும், வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதாலும் வேதாரண்யம் பகுதியை சோந்்த 5 ஆயிரம் மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. 
மீன்பிடிக்க செல்லவில்லை
மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் தங்களது  ஆயிரக்கணக்கான  பைபர் படகுகளை பாதுகாப்பாக கரையோரத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். 
மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது. அவ்வப்போது வேதாரண்யம் சுற்றுவட்டார பகுதியில் கனமழையும் பெய்து வருகிறது.

Next Story