மாவட்ட செய்திகள்

கள்ளக்குறிச்சியில் புதிய தொழில் பூங்கா அமைக்க வேண்டும் + "||" + To set up a new industrial park

கள்ளக்குறிச்சியில் புதிய தொழில் பூங்கா அமைக்க வேண்டும்

கள்ளக்குறிச்சியில் புதிய தொழில் பூங்கா அமைக்க வேண்டும்
கள்ளக்குறிச்சி வளர்ச்சி பெற புதிய தொழில் பூங்கா அமைக்க வேண்டும் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
கள்ளக்குறிச்சி.

கள்ளக்குறிச்சியில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இன்பராஜ், பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். செயலாளர் யுவராஜ் வரவேற்றார். இதில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 
கூட்டத்தில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறு, குறு தொழில், விவசாயம் அல்லாத உற்பத்தி தொழில், தொழிற்சாலைகள் மிகவும் பின் தங்கி இருக்கிறது. எனவே கள்ளக்குறிச்சி மாவட்டம் வளர்ச்சி பெற புதிய தொழில் பூங்கா அமைக்க  வேண்டும். சின்னசேலம்-கள்ளக்குறிச்சி இடையே ரெயில் பாதை,  கள்ளக்குறிச்சி-உளுந்தூர்பேட்டை இடையே ரெயில் பாதை அமைக்கும் பணியை விரைவில் தொடங்க வேண்டும், வணிகர்கள் நல வாரியம் முழுமையாக செயல்பட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் சங்க பொருளாளர் தட்சிணாமூர்த்தி நன்றி கூறினார்.