கல்வராயன்மலையில் மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணி தீவிரம்
கல்வராயன்மலையில் மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கச்சிராயப்பாளையம்,
கல்வராயன்மலை பகுதியில் பெய்த கனமழையால் பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் சாலை சேதமடைந்துள்ளது. சாலைகளில் மண் அரிப்பு ஏற்பட்டும், பாறைகள் உருண்டு சாலைகளில் விழுந்தும் கிடக்கின்றன. இதனால் வாகன போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வெள்ளிமலையில் இருந்து சின்னதிருப்பதிக்கு செல்லும் சாலை, மேல்பாச்சேரி முதல் தாழ்பாச்சேரி வரையிலான சாலை, சின்னதிருப்பதி- புதூர் சாலை, மணப்பாச்சி சாலையிலும் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
சீரமைப்பு
இந்த சாலைகளை சீரமைக்க சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராமனிடம் கூறினார். இதையடுத்து தற்காலிகமாக பொக்லைன் எந்திரங்கள் மூலம் சாலை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராமன், உதவி பொறியாளர்கள் அருண், ராஜா ஆகியோர் பார்வையிட்டு வருகிறார்கள். இதனால் மலை கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சில கிராமங்களில் மீண்டும் வாகன போக்குவரத்து தொடங்கியது.
Related Tags :
Next Story