மனைவியை கொலை செய்ய முயன்ற ஆயுள்தண்டனை கைதி மீண்டும் கைது


மனைவியை கொலை செய்ய முயன்ற ஆயுள்தண்டனை கைதி மீண்டும் கைது
x
தினத்தந்தி 25 Nov 2021 10:45 PM IST (Updated: 25 Nov 2021 10:45 PM IST)
t-max-icont-min-icon

ஆயுள் தண்டனை கைதி மனைவியை கொலை செய்ய முயன்றதால் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

தொண்டி, 
ஆயுள் தண்டனை கைதி மனைவியை கொலை செய்ய முயன்றதால் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
கொலை
திருவாடானை தாலுகா தெற்கு ஆண்டாவூரணி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது53). இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு அதே கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ஒருவரை வெட்டிக் கொலை செய்த சம்பவம் தொடர்பாக ஆயுள் தண்டனை பெற்ற நிலையில் சிறையில் தண்டனையை அனுபவித்து வந்துள்ளார். 
7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கு தொடர்பாக மேல்முறையீடு செய்த நிலையில் ஜாமீனில் வெளிவந்த ரவிச்சந்திரன் கடந்த ஒரு மாத காலமாக ஆண்டாவூரணி கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். 
இந்தநிலையில் சம்பவத்தன்று இவருக்கும் இவரது மனைவிக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. 
வழக்குப்பதிவு
இதில் ஆத்திரமடைந்த ரவிச்சந்திரன் மனைவியை தரக்குறைவாக பேசியதுடன் மிரட்டல் விடுத்து அரிவாளை எடுத்துக்கொண்டு வெட்ட விரட்டி சென்றுள்ளார். 
இது தொடர்பாக அவரது மனைவி பொட்டுமாகாந்தி (48). எஸ்.பி.பட்டினம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவிச்சந்திரனை கைது செய்து பரமக்குடி சிறையில் அடைத்தனர்.

Related Tags :
Next Story