மாவட்ட செய்திகள்

உளுந்தூர்பேட்டையில் மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி + "||" + Awareness program on the harms of alcohol

உளுந்தூர்பேட்டையில் மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

உளுந்தூர்பேட்டையில் மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
உளுந்தூர்பேட்டை, 
உளுந்தூர்பேட்டை மதுவிலக்கு அமலாக்க பிரிவு சார்பில் பஸ் நிலையத்தில் மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதற்கு மதுவிலக்கு அமலாக்க பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். முகாமில் மதுபானங்கள், சாராயம், போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுபிரசுரமும் வினியோகம் செய்யப்பட்டது. இதில் மதுவிலக்கு போலீசார் கலந்து கொண்டனர்.