உளுந்தூர்பேட்டையில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


உளுந்தூர்பேட்டையில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 Nov 2021 10:55 PM IST (Updated: 25 Nov 2021 10:55 PM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டையில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.

உளுந்தூர்பேட்டை, 

உளுந்தூர்பேட்டை தாலுகா அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், வீடுகளை இழந்த குடும்பத்திற்கும் இழப்பீடு வழங்க வேண்டும், குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரண உதவி வழங்க வேண்டும், சேந்தநாடு கூட்டுறவு சங்க முறைகேடுகள் குறித்து முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கலியமூர்தி தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் கந்தசாமி, ஏழுமலை, ஆறுமுகம், பாலசுந்தரம், கொளஞ்சி நாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story