பஞ்சராகி நின்றபோது கார் திடீரென தீ பிடித்து எரிந்தது. 5 பேர் காயமின்றி தப்பினர்


பஞ்சராகி நின்றபோது கார் திடீரென தீ பிடித்து எரிந்தது. 5 பேர் காயமின்றி தப்பினர்
x
தினத்தந்தி 25 Nov 2021 5:54 PM GMT (Updated: 25 Nov 2021 5:54 PM GMT)

நாட்டறம்பள்ளி அருகே பஞ்சராகி நின்றபோது கார் திடீரென தீ பிடித்து எரிந்தது. இதில் காரில் இருந்த 5 பேர் காயமின்றி தப்பினர்.

ஜோலார்பேட்டை

நாட்டறம்பள்ளி அருகே பஞ்சராகி நின்றபோது கார் திடீரென தீ பிடித்து எரிந்தது. இதில் காரில் இருந்த 5 பேர் காயமின்றி தப்பினர்.
பெங்களூரு சென்றனர்

வேலூரை அடுத்த விருதம்பட்டு பகுதியை சேர்ந்தவர் அஸ்தாஜ் அகமத் (வயது 27). இவருடைய தந்தை ரசித் அகமத், தாயார் துரையா மற்றும் மனைவி சப்பனா. இவரது 2 வயது குழந்தை இணையா ஆகிய 5 பேரும் நேற்று பெங்களூருவில் உள்ள தங்களது உறவினர்களை பார்ப்பதற்காக நேற்று இரவு வேலூரில் இருந்து காரில் புறப்பட்டனர்.

காரை அஸ்தாஜ் அகமத் ஓட்டினார். கார் கிருஷ்ணகிரி நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. வாணியம்பாடி- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் நாட்டறம்பள்ளி அடுத்த கல்குட்டை பெருமாள் கோவில் எதிரில் சென்ற போது காரின் முன் பக்க டயர் பஞ்சர் ஆனது. இதனால் காரை நிறுத்தினர்.

தீ பிடித்தது 

அப்போது காரின் முன் பகுதியில் இருந்து நெருப்பு வந்துள்ளது. இதனால் காரில் இருந்த அனைவரும் உடனடியாக கீழே இறங்கி உள்ளனர். அதற்குள் கார் முழுவதும் பயங்கரமாக எரியத்தொடங்கியது. காரில் இருந்தவர்கள் இறங்கியதால் அனைவரும் காயமின்றி தப்பினர்.

இது குறித்து தகவலறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்தை சீர் செய்தனர். நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) கலைமணி தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். அதற்குள் கார் முற்றிலும் எரிந்து நாசமானது.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story