திருப்பத்தூரில் மழைநீரை அகற்றாததை கண்டித்து சாலை மறியல்


திருப்பத்தூரில்  மழைநீரை அகற்றாததை கண்டித்து சாலை மறியல்
x
தினத்தந்தி 25 Nov 2021 11:24 PM IST (Updated: 25 Nov 2021 11:24 PM IST)
t-max-icont-min-icon

மழைநீரை அகற்றாததை கண்டித்து சாலை மறியல்

திருப்பத்தூர்

திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளான அவ்வை நகர், சந்திரன் நகர் பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட வீடுகளில் 1,500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் எப்பொழுது மழை பெய்தாலும் மழை நீர் வெளியேறுவதற்கு வடிகால் இல்லாத காரணத்தினால் குளம் போல் நீண்ட நாட்களாக மழைநீர் தேங்கி நின்று விடுகிறது. இதனால் பொதுமக்கள் கொசுத் தொல்லை, துர்நாற்றால்பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

இதுகுறித்து நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி நேற்று புதுப்பேட்டை ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த டவுன் போலீசார், நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த மறியலால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Next Story