மாவட்ட செய்திகள்

எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாமதம் + "||" + Express trains delayed

எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாமதம்

எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாமதம்
எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாமதம்
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் நேற்று பெய்த மழை காரணமாக தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் தண்டவாளம் மூழ்கியதால் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து தண்டவாளத்தில் இருந்து மழைநீர் மோட்டார் மூலம் அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் நேற்று மாலை 5.15 மணிக்கு புறப்பட வேண்டிய மைசூரு எக்ஸ்பிரஸ் ரெயில் தாமதமாக இரவு 9.15 மணிக்கும், இரவு 8.15 மணிக்கு புறப்பட வேண்டிய முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் 12.15 மணிக்கும் புறப்படும் என்றும், தூத்துக்குடி-நெல்லை பாசஞ்சர் ரெயில் ரத்து செய்யப்படுவதாகவும் தெற்கு ரெயில்வே அறிவித்தது.