மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி சாவு
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.
ஆவூர்:
விராலிமலை ஒன்றியம், குமாரமங்கலம் ஊராட்சி, வடுகபட்டியை சேர்ந்தவர் தமிழன் மகன் சத்தியமூர்த்தி (வயது 21). இவர் கடந்த 21-ந் தேதி தனது பாட்டி பாப்பம்மாள் (70) என்பவரை தனது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர வைத்து சமயபுரம் கோவிலுக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் உள்ள ஐஸ்வர்யா கார்டன் என்ற இடத்தில் சென்றபோது திடீரென நாய் ஒன்று மோட்டார் சைக்கிளின் குறுக்கே சென்றது. இதனால் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்த 2 பேரும் படுகாயம் அடைந்தனர். இதைப்பார்த்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் காயமடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மூதாட்டி பரிதாபமாக நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து மாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் யோகராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
Related Tags :
Next Story