பொன்னமராவதியை சேர்ந்தவர் சவுதி அரேபியாவில் வாகன விபத்தில் டிரைவர் பலி உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர மனைவி கோரிக்கை


பொன்னமராவதியை சேர்ந்தவர் சவுதி அரேபியாவில் வாகன விபத்தில் டிரைவர் பலி உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர மனைவி கோரிக்கை
x
தினத்தந்தி 26 Nov 2021 12:03 AM IST (Updated: 26 Nov 2021 12:03 AM IST)
t-max-icont-min-icon

சவுதி அரேபியாவில் வாகன விபத்தில் டிரைவர் பலியானார்.

காரையூர்:
பொன்னமராவதி தாலுகாவுக்கு உட்பட்ட எம்.உசிலம்பட்டியை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 37). இவருக்கு இளஞ்சியம் என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். ஆனந்தன் கடந்த 2 ஆண்டுகளாக சவுதி அரேபியாவில் டிரைவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் ஆனந்தன் கடந்த 7-ந் தேதி சவுதி அரேபியாவில் வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த ஆனந்தன் குடும்பத்தினர் கடந்த 17 நாட்களாக உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர போராடி வருகின்றனர். ஆனந்தன் உடலை உடனடியாக கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து ஆனந்தன் மனைவி இளஞ்சியம் கூறுகையில், தனது கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். 

Next Story