மாவட்ட செய்திகள்

மின்சாரம் தாக்கி பசுமாடு பலி + "||" + Cow killed by electric shock

மின்சாரம் தாக்கி பசுமாடு பலி

மின்சாரம் தாக்கி பசுமாடு பலி
மின்சாரம் தாக்கி பசுமாடு பலி
அரக்கோணம்

அரக்கோணத்தை அடுத்த மின்னல் கைலாசபுரத்தை சேர்ந்தவர் வரதன் (வயது 50). விவசாயி. இவரது பசுமாடு அரக்கோணம்- சோளிங்கர் சாலை பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அங்குள்ள மின் கம்பத்திற்கு தாங்கி பிடிப்பதற்காக அமைத்திருந்த கம்பியில் மின்சாரம் பாய்ந்து இருந்ததாக கூறப்படுகிறது. 

இந்த கம்பி மீது பசுமாடு உரசியபோது மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது. உடனே அருகில் இருந்தவர்கள் மின் வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ் இது குறித்து விசாரணை மேற்கொண்டார்.