மாவட்ட செய்திகள்

மகளுக்குபாலியல் தொல்லை கொடுத்தவருக்கு சாகும் வரை சிறை + "||" + Imprisonment until death for man who sexually harassed daughter

மகளுக்குபாலியல் தொல்லை கொடுத்தவருக்கு சாகும் வரை சிறை

மகளுக்குபாலியல் தொல்லை கொடுத்தவருக்கு சாகும் வரை சிறை
மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து மதுரை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்தது.
மதுரை
மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து மதுரை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்தது.
மகளுக்கு பாலியல் தொல்லை
மதுரையை சேர்ந்த ஒருவருக்கு 3 மகள்கள் உள்ளனர். அவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். அவர் சொந்த ஊருக்கு வந்திருந்த போது, பள்ளியில் படித்து வந்த தனது மகள் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால் அந்த சிறுமியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதை பள்ளிக்கூட ஆசிரியைகள் அறிந்தனர். இதுகுறித்து அந்த சிறுமியிடம் கேட்டபோது, அவர் தனது தந்தையின் நடத்தை குறித்து ஆசிரியைகளிடம் தெரிவித்தார்.
பின்னர் இதுதொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர், குழந்தைகள் நலக்குழுவிடம் புகார் செய்தார். இதன்படி அவர்கள் விசாரித்து சமயநல்லூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து, மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை கைது செய்தனர்.
சாகும் வரை சிறை
இந்த வழக்கு மதுரை மாவட்ட குழந்தைகள் வன்கொடுமை தடுப்புச்சட்ட வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது.
அப்போது சம்பந்தப்பட்ட சாட்சிகள் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். அரசு தரப்பில் வக்கீல் ஜான்சிராணி ஆஜரானார்.
விசாரணை முடிவில், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு சாகும் வரை சிறை தண்டனையும், ரூ.61 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ராதிகா நேற்று தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு கோர்ட்டு பரிந்துரை செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. 2 பேருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை
இளநிலை பொறியாளர் உள்பட 2 பேருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது.
2. ஆட்டோ மோதி பெண் பலி; டிரைவருக்கு ஓராண்டு சிறை-குளித்தலை கோர்ட்டு தீர்ப்பு
ஆட்டோ மோதி பெண் பலியானார். இதையடுத்து, டிரைவருக்கு ஓராண்டு சிறையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து குளித்தலை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
3. பள்ளி மாணவியை சில்மிஷம் செய்த வழக்கில் ஆசிரியருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை உடந்தையாக இருந்த மற்றொரு ஆசிரியருக்கும் சிறை
பள்ளி மாணவியை சில்மிஷம் செய்த வழக்கில் ஆசிரியருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், அவருக்கு உடந்தையாக இருந்த மற்றொரு ஆசிரியருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது
4. ரேஷன் அரிசி கடத்தியவருக்கு 2 ஆண்டு சிறை
ரேஷன் அரிசி கடத்தியவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து விருதுநகர் கோர்ட்டு உத்தரவிட்டது.
5. சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு சாகும்வரை சிறை
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு சாகும்வரை சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது. மேலும் அவருடைய நண்பர்கள் 2 பேருக்கும் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது