இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு வாகன பிரசாரம்


இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு வாகன பிரசாரம்
x
தினத்தந்தி 26 Nov 2021 12:57 AM IST (Updated: 26 Nov 2021 12:57 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு வாகன பிரசாரம் நடந்தது.

நெல்லை:
நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் மண்டல அலுவலக வளாகத்தில் இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு வாகன பிரசார தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. நெல்லை கல்வி மாவட்ட கல்வி அலுவலர் வசந்தா கொடியசைத்து பிரசார வாகனத்தை தொடங்கி வைத்தார். ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர் சிவராஜ் முன்னிலை வகித்தார்.
பிரசார வாகனத்தில் கலை குழுவினர் ஒவ்வொரு குடியிருப்பு பகுதிகளுக்கும் சென்று இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப் படுத்துவார்கள். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ராமஷ், ஜெபர்சன், புஷ்பா ஆகியோர் செய்திருந்தனர்.

Next Story