தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 25 Nov 2021 7:34 PM GMT (Updated: 25 Nov 2021 7:34 PM GMT)

தஞ்சை மாவட்டத்தில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.

கழிவுநீர் வடிகால் வசதி வேண்டும்
தஞ்சை மாவட்டம் பாபநாசம் பகுதி அந்தோணியார் கோவில் தெருவில் கழிவுநீர் வடிகால் வசதி இல்லை. இதனால் கழிவுநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. மேலும், மழைக்காலங்களில் கழிவுநீருடன் மழைநீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்துவிடுகிறது. இதனால் வீடுகளில் உள்ள பெண்கள், குழந்தைகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், தேங்கி கிடக்கும் கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் கழிவுநீர் வடிகால் வசதி செய்து தர நடவடிக்கை எடுப்பார்களா?
-பிரசாந்த், பாபநாசம்.
குடிநீர் குழாயை சூழ்ந்த கழிவுநீர்
தஞ்சை மானம்புச்சாவடி அருகே உள்ள வாடிவாசல் கடைத்தெருவில் பொதுமக்கள் வசதிக்காக குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது. தற்போது இந்த குடிநீர் குழாய் பகுதியை கழிவுநீர் சூழ்ந்து உள்ளது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் குடிநீர் குழாயை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், தேங்கி கிடக்கும் கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் குழாயை சூழ்ந்துள்ள கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.
-அதிசயராஜ், தஞ்சை.
குப்பைத்தொட்டி வேண்டும்
தஞ்சை கீழவாசல் பகுதியில் உள்ள தாலுகா போலீஸ் நிலையம் அருகே உள்ள சாலையோரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. அதுமட்டுமின்றி, தேங்கி கிடக்கும் குப்பைகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் குப்பைகள் குவிந்து கிடக்கும் பகுதி சாக்கடை போல் மாறிவிடுகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றிவிட்டு, அந்த பகுதியில் குப்பைத்தொட்டி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
-பொதுமக்கள், கீழவாசல்.
சாலையில் தேங்கும் மழைநீர்
தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள பாத்திமா நகர் 2-ம் தெருவில் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. தேங்கி கிடக்கும் மழைநீரால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், தேங்கி கிடக்கும் மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மழைநீர் தேங்காதவாறு சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வீரா, பாத்திமா நகர் 2-ம் தெரு, தஞ்சை.
நாய்கள் தொல்லை
தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை மங்களபுரம் பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள சுந்தரம் நகர், திருப்பதி நகர், லட்சுமிபுரம், அணில் நகர் பகுதிகளில் நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவைகள் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள், குழந்தைகளை விரட்டி சென்று கடிக்கின்றன. மேலும், இருசக்கர மற்றும் கார்களில் செல்பவர்களை விரட்டுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். மேலும், வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு, கோழிகளை நாய்கள் கூட்டமாக வந்து வேட்டையாடி செல்கின்றன. இதன் காரணமாக அந்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் காணப்படுகின்றனர். எனவே  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதிகளில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்தபகுதி மக்களின் கோரிக்கையாகும்.
-பொதுமக்கள், தஞ்சை.



Next Story