கால்வாய் கரையில் ஏற்பட்ட அரிப்பை தடுக்க நடவடிக்கை- ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தகவல்
திருக்குறுங்குடி அருகே கால்வாய் கரையில் ஏற்பட்ட அரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
ஏர்வாடி:
தொடர் மழை காரணமாக, திருக்குறுங்குடி அருகே வடுகச்சிமதில் குளத்திற்கு தண்ணீர் செல்லும் இறையடிக்கால்வாயின் கரையில் அரிப்பு ஏற்பட்டது. இதனால் இறையடிக்கால் கிராமத்துக்குள் வெள்ளம் புகும் அபாயம் ஏற்பட்டது.
உடனே அங்கு விரைந்து சென்ற ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. இறையடிக்கால்வாய் கரையில் உள்ள புதர் செடிகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றவும், கால்வாய் கரையில் மணல் மூட்டைகளை அடுக்கி வைக்கவும் நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார்.
மேலும் கட்டளையில் இருந்து செங்களாகுறிச்சிக்கு செல்லும் கால்வாயின் குறுக்கே பாலம் அமைக்கவும் ஏற்பாடு செய்வதாக எம்.எல்.ஏ. தெரிவித்தார். அவருடன் கக்கன், இந்திய கம்யூனிஸ்டு லெனின் முருகானந்தம் மற்றும் பலர் சென்றனர்.
Related Tags :
Next Story