மாவட்ட செய்திகள்

பஸ் நேரம் மாற்றப்பட்டதை கண்டித்து கிராமமக்கள் மறியல் + "||" + Road block

பஸ் நேரம் மாற்றப்பட்டதை கண்டித்து கிராமமக்கள் மறியல்

பஸ் நேரம் மாற்றப்பட்டதை கண்டித்து கிராமமக்கள் மறியல்
ஆலங்குளம் அருகே பஸ் இயக்க நேரம் மாற்றப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆலங்குளம், 
ஆலங்குளம் அருகே பஸ் இயக்க நேரம் மாற்றப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
அரசு பஸ்
ஆலங்குளம் அருகே மேலாண்மறைநாடு கிராமம் உள்ளது. இங்கிருந்து தினமும் காலை  8.45 மணிக்கு ஆலங்குளம் வழியாக ராஜபாளையம் வரை அரசு பஸ் ஒன்று  சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் மேலாண்மறைநாடு, கோவில் செந்தட்டியாபுரம், செல்லம்பட்டி, கோட்டைபட்டி, வலையபட்டி, பெத்லேகம், கோவிலூர், கண்மாய் பட்டி ஆகிய கிராமங்களில் இருந்து பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் சென்று வந்தனர். 
அதேபோல வேலைக்கு செல்பவர்களும், விவசாயிகள் தங்களுடைய உற்பத்தி பொருட்களை கொண்டு செல்வதற்கும் இந்த பஸ்சை பயன்படுத்தி வந்தனர். 
பேச்சுவார்த்தை 
 இ்ந்தநிலையில் இந்த பஸ் தொம்ப குளம் வழியாக சுற்றி ராஜபாளையம் சென்றது. இதனால் காலை 8.45 மணிக்கு மேலாண்மறைநாடு கிராமத்தில் இருந்து புறப்படவேண்டிய பஸ் காலை 8.45 மணிக்கு முன்னதாகவே புறப்பட்டு செல்கிறது. 
இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். எனவே மீண்டும் 8.45 மணிக்கு பஸ் இயக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ராஜபாளையம் டெப்போ மேலாளர் ஜீவா மறியல் செய்தவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் மறியல் கைவிடப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திடீர் சாலை மறியல்
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
2. சின்னசேலம் அருகே லாரி டிரைவர் மர்மசாவு சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் சாலை மறியல்
சின்னசேலம் அருகே லாரி டிரைவர் மர்மசாவு சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் சாலை மறியல்
3. குடிநீர் உள்ளிட்ட வசதிகள் கேட்டு தொழிற்பயிற்சி மைய மாணவர்கள் சாலை மறியல் சிதம்பரத்தில் பரபரப்பு
சிதம்பரத்தில் குடிநீர் உள்ளிட்ட வசதிகள் கேட்டு தொழிற்பயிற்சி மைய மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
4. மோட்டார் சைக்கிள் மோதி பலியான சிறுவனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல் விருத்தாசலத்தில் பரபரப்பு
விருத்தாசலத்தில் மோட்டார் சைக்கிள் மோதி பலியான சிறுவனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
5. ஏரி உபரிநீர் குடியிருப்பு பகுதியில் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியல்
ஏரி உபரிநீர் குடியிருப்பு பகுதியில் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.