ஆதார் பதிவு- திருத்த சிறப்பு முகாம்
ஆதார் பதிவு- திருத்த சிறப்பு முகாம் நாளை வரை நடக்கிறது.
பெரம்பலூர்:
இந்திய அஞ்சல்துறை சார்பில் பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு புதிதாக ஆதார் பதிவு செய்யவும் மற்றும் செல்போன் எண் மாற்றம் போன்ற திருத்தங்களை பழைய ஆதாரில் செய்யவும் சிறப்பு முகாம் பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று முதல் தொடங்கியது. முகாமில் புதிதாக ஆதார் பதிவு செய்வதற்கு இலவசமாகவும், பழைய ஆதாரில் திருத்தங்கள் செய்வதற்கு ரூ.50-ம், பயோ-மெட்ரிக் திருத்தங்கள் செய்வதற்கு ரூ.100-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும் இந்த முகாம் இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. எனவே பொதுமக்கள் இந்த முகாமினை தவறாமல் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று ஸ்ரீரங்கம் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் விஜயா தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story