மாவட்ட செய்திகள்

பெரம்பலூர் மாவட்டத்தில் பலத்த மழை + "||" + Heavy rains in Perambalur district

பெரம்பலூர் மாவட்டத்தில் பலத்த மழை

பெரம்பலூர் மாவட்டத்தில் பலத்த மழை
பெரம்பலூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது.
பெரம்பலூர்:

விவசாய பணிகள் மும்முரம்
பெரம்பலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்ததால் நீர்த்தேக்கங்கள் நிரம்பி, பெரும்பாலான ஏரி, குளங்கள் நிரம்பியதால் தற்போது விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மருதையாற்றிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் பகல் நேரத்தில் மழை பெய்யாமல், இரவு நேரத்தில் அவ்வப்போது விட்டு, விட்டு மழை பெய்தது.
பலத்த மழை
இந்நிலையில் நேற்று காலை அவ்வப்போது விட்டு, விட்டு மழையாக தூறிக்கொண்டிருந்தது. மதியம் 1.15 மணிக்கு திடீரென்று இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது. சுமார் அரை மணி நேரம் தொடர்ந்து மழை பெய்தது.
இதையடுத்து மதியம் 2.30 மணிக்கு மீண்டும் பெய்ய தொடங்கிய பலத்த மழை சுமார் 1 மணி நேரம் நீடித்தது. பின்னர் விட்டு, விட்டு மழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் மழை நீர் குளம் போல் தேங்கி நின்றது.  இரவிலும் மழை பெய்தது.நேற்று பெய்த மழையால் ஏரி, குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சூறைக்காற்றுடன் பலத்த மழை; மரம் சாய்ந்ததில் மின்கம்பம் விழுந்தது
ஜெயங்கொண்டத்தில் சூறைக்காற்றுடன் பலத்த மழையால் மரம் சாய்ந்ததில் மின்கம்பம் விழுந்தது.
2. மேலூர், வாடிப்பட்டி, திருமங்கலம் பகுதியில் பலத்த மழை
மேலூர், வாடிப்பட்டி, திருமங்கலம் பகுதியில் நேற்று பலத்த மழை பெய்தது
3. அந்தியூர் தவுட்டுப்பாளையத்தில் கனமழையால் வீடு இடிந்து விழுந்தது- 5 பேர் உயிர் தப்பினர்
அந்தியூர் தவுட்டுப்பாளையத்தில் கனமழையால் வீடு இடிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக 5 பேர் உயிர் தப்பினார்கள்.
4. தீவு பகுதியில் பலத்த மழை
ராமேசுவரம் தீவு பகுதியில் பலத்த மழை பெய்ததால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
5. அலிபிரி, ஸ்ரீவாரி மெட்டு நடைபாதைகள் 2 நாட்கள் மூடல்: திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தகவல்
பலத்த மழை காரணமாக அலிபிரி, ஸ்ரீவாரி மெட்டு நடைபாதைகள் 2 நாட்கள் மூடப்படுவதாக திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.