கூட்டுறவு வங்கி முன்பு பொதுமக்கள் சாலை மறியல்
கூட்டுறவு வங்கி முன்பு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சுள்ளங்குடி கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் வங்கியை அணுகி விவசாய கடனுக்காக பதிவு செய்திருந்தனர். ஆனால் வங்கி அதிகாரிகள் கடன் வழங்காமல் விவசாயிகளை இழுத்தடித்ததாக கூறப்படுகிறது. இதேபோன்று வெகுநாட்கள் நடந்ததால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்கள், நேற்று திருமானூரில் இருந்து ஏலாக்குறிச்சி செல்லும் சாலையில் கூட்டுறவு கடன் வங்கியின் முன்பு ஒன்று திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்த திருமானூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொது மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story