மாணவர் விஷம் குடித்து தற்கொலை


மாணவர் விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 26 Nov 2021 1:42 AM IST (Updated: 26 Nov 2021 1:42 AM IST)
t-max-icont-min-icon

மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

செந்துறை:


அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள நல்லநாயக்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சிநாதன். இவரது மனைவி தனலட்சுமி. இவர்களது மகன் செல்வகுமார்(வயது 18). இவர் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
கொளஞ்சிநாதனும், தனலட்சுமியும் சிங்கப்பூரில் வேலை செய்கின்றனர். அவர்கள், செல்வகுமாரின் படிப்பிற்காக விலை உயர்ந்த செல்போனை வாங்கி கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில் சொந்த ஊருக்கு திரும்பிய கொளஞ்சிநாதன், வீட்டில் செல்போனில் கேம் விளையாடிய செல்வகுமாரை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த 10-ந் தேதி செல்வகுமார் விஷம் குடித்தார்.
இதைக்கண்டவர்கள் அவரை மீட்டு சிகிச்்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து செந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story