சூறைக்காற்றுடன் பலத்த மழை; மரம் சாய்ந்ததில் மின்கம்பம் விழுந்தது


சூறைக்காற்றுடன் பலத்த மழை; மரம் சாய்ந்ததில் மின்கம்பம் விழுந்தது
x
தினத்தந்தி 26 Nov 2021 1:42 AM IST (Updated: 26 Nov 2021 1:42 AM IST)
t-max-icont-min-icon

ஜெயங்கொண்டத்தில் சூறைக்காற்றுடன் பலத்த மழையால் மரம் சாய்ந்ததில் மின்கம்பம் விழுந்தது.

ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை பலத்த சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. அப்போது ஜெயங்கொண்டம் வேலாயுதம் நகர் 9-வது குறுக்குத்தெருவில் தனியார் பள்ளி அருகே சாலையோரத்தில் இருந்த மரம் அருகில் இருந்த மின் கம்பத்தின் மீது சாய்ந்தது. இதையடுத்து மின்கம்பமும், மரமும் அடியோடு சாய்ந்து சாலையில் விழுந்தன. இதனால் மின்கம்பிகள் சாலையில் விழுந்து கிடந்தன. அப்போது அந்தப் பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. பின்னர் இதுபற்றி மின்வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உடனடியாக மின்சாரம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து சாய்ந்து கிடந்த மின் கம்பம் மற்றும் மரம் அகற்றப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story