வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது
நரிக்குடி அருகே மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.
காரியாபட்டி,
நரிக்குடி அருகே இருஞ்சிறை குரூப் மன்னர் முடியேந்தல் கிராமத்தை சேர்ந்த செல்லம் மகன் வேலு என்பவரின் வீட்டு சுவர் தொடர்மழையினால் இடிந்துவிட்டது. நரிக்குடி அருகே சொரிக்குளம் குருப் சீனிக்காரனேந்தல் கிராமத்தை சேர்ந்த குப்புச்சாமி மகன் சின்னச்சாமி என்பவரது ஓட்டு வீட்டின் சுவரும் இடிந்து விழுந்தது. எம்.புதுக்குளம் குரூப் கட்டாலங்குளம் கிராமத்தில் கந்தன் மகன் ஆறுமுகம் என்பவரின் வீட்டு சுவரும் இடிந்து விழுந்தது. நரிக்குடி அருகே மாயலேரி கிராமத்தில் வசித்து வரும் மாயாண்டி மகன் மகேந்திரன் என்பவரின் வீட்டு சுவரும் இடிந்து விழுந்தது. இதில் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை. வீடுகள் இடிந்த நபர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story