நூதன முறையில் மோட்டார் சைக்கிள் திருட்டு


நூதன முறையில் மோட்டார் சைக்கிள் திருட்டு
x
தினத்தந்தி 26 Nov 2021 1:52 AM IST (Updated: 26 Nov 2021 1:52 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குளத்தில் நூதன முறையில் மோட்டார் சைக்கிளை மர்ம நபர் திருடிச் சென்றார்.

ஆலங்குளம்;
ஆலங்குளம் புரட்சி நகரை சேர்ந்தவர் கந்தன் மகன் ரமேஷ் (வயது 33). இவர் ஆலங்குளம் - தென்காசி சாலையில் இரு சக்கர வாகனம் விற்கும் கடை வைத்துள்ளார். இவரது கடையில் 50-க்கும் மேற்பட்ட பழைய மோட்டார் சைக்கிள்கள் விற்பனைக்கு விட்டிருந்தார். இங்கு மோட்டார் சைக்கிள்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் அதனை ஓட்டி பார்த்துவிட்டு, அதன் பின்னரே விலை கொடுத்து வாங்குவது வழக்கம்.
இதேபோல் நேற்று மாலை அந்த கடைக்கு 40 வயது மதிக்கதக்க நபர் ஒருவர் மோட்டார்சைக்கிளை ஓட்டி பார்த்துவிட்டு வருவதாக ஆலங்குளம் பஸ் நிலையம் நோக்கி சென்றவர் நீண்ட நேரமாகியும் கடைக்கு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ரமேஷ் ஆலங்குளத்தில் அனைத்து இடங்களிலும் தேடியுள்ளார். மோட்டார் சைக்கிளுடன் அந்த மர்ம நபர் காணாமல் போனதால் இதுகுறித்து ஆலங்குளம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் பெட்ரோல் பங்க் மற்றும் அருகில் உள்ள கடைகளில் உள்ள சி.சி.டிவி கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

Next Story