மாவட்ட செய்திகள்

நல்லம்பள்ளி அருகேமாரியம்மன் கோவிலில் நகை, உண்டியல் பணம் திருட்டு + "||" + theft in temple

நல்லம்பள்ளி அருகேமாரியம்மன் கோவிலில் நகை, உண்டியல் பணம் திருட்டு

நல்லம்பள்ளி அருகேமாரியம்மன் கோவிலில் நகை, உண்டியல் பணம் திருட்டு
நல்லம்பள்ளி அருகே மாரியம்மன் கோவிலில் நகை, உண்டியல் பணம் திருட்டு
நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அருகே கந்துக்கால்பட்டி வன்னியர் தெருவில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் அம்மனுக்கு சிறப்பு பூஜையை நடத்தி விட்டு பூசாரி கோவிலை பூட்டி சென்றார். 
இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல் கோவிலை பூசாரி திறக்க வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது அம்மன் கழுத்தில் கிடந்த தங்ககாசுகளுடன் கூடிய சுமார் 3 பவுன் தங்கத்தாலி மற்றும் உண்டியலுடன் 5 ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்த சுமார் ரூ.50 ஆயிரம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது, 
இதுகுறித்த தகவலின்பேரில் தொப்பூர் போலீசார் கோவிலுக்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் மர்மநபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலில் திருடிய மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நல்லம்பள்ளி அருகே மின்சாரம் தாக்கி பெண் பலி
நல்லம்பள்ளி அருகே மின்சாரம் தாக்கி பெண் பலியானார்.
2. நல்லம்பள்ளி அருகே விபத்தில் வாலிபர் பலி
நல்லம்பள்ளி அருகே விபத்தில் வாலிபர் பலி