தக்காளி விலை குறைந்தது


தக்காளி விலை குறைந்தது
x
தினத்தந்தி 25 Nov 2021 8:37 PM GMT (Updated: 25 Nov 2021 8:37 PM GMT)

வரத்து அதிகரித்ததால் திருச்சியில் தக்காளி விலை சரிந்து கிலோ ரூ.60-க்கு விற்கப்பட்டது.

திருச்சி
தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாகவும், வரத்து குறைவாலும் காய்கறிகள் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. குறிப்பாக தக்காளி கிலோ ரூ.100-ஐ தாண்டி விற்பனையானது. திருச்சியிலும் காய்கறிகளின் விலை கணிசமாக உயர்ந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.  இதையடுத்து பசுமை பண்ணை கடைகளில் கிலோ ரூ.75-க்கு தக்காளி விற்கப்பட்டது. இந்தநிலையில் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து அதிகரித்ததால் அதன்விலை பாதியாக குறைந்துள்ளது.
பொதுமக்கள் நிம்மதி 
 திருச்சி காந்தி மார்க்கெட்டில் மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி நேற்று ரூ.50-க்கு விற்பனையானது. 2-ம் ரக தக்காளி கிலோ ரூ.40-க்கு விற்கப்பட்டது. சில்லறை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்கப்பட்டது. தக்காளி விலை நேற்று முன்தினம் விற்ற விலையை விட கிலோவுக்கு ரூ.40 முதல் ரூ.50 வரை குறைந்துள்ளதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Next Story