சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு


சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு
x
தினத்தந்தி 26 Nov 2021 2:27 AM IST (Updated: 26 Nov 2021 2:27 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

சேலம்
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 39 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று பாதிப்பு சற்று அதிகரித்தது. அதாவது புதிதாக 43 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன்படி மாநகர் பகுதியில் 13 பேர் பாதிக்கப்பட்டனர். காடையாம்பட்டி, கொங்கணாபுரம், சங்ககிரி, பனமரத்துப்பட்டி பகுதிகளில் தலா ஒருவர், எடப்பாடி, தாரமங்கலம், மேட்டூரில் தலா 2 பேர், சேலம், வீரபாண்டியில் தலா 4 பேர், மேச்சேரியில் 5 பேர், ஓமலூரில் 6 பேர், தர்மபுரியில் இருந்து சேலத்திற்கு வந்த ஒருவர் என மொத்தம் 43 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து ஆயிரத்து 85 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 98 ஆயிரத்து 934 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். 1,700 பேர் பலியாகி உள்ளனர்.

Next Story