சேலத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.3½ கோடியில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணிகள் தீவிரம் ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆய்வு
சேலத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.3½ கோடியில் நடந்து வரும் உள் விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணியை ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார்.
சேலம்
சேலம் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக அஸ்தம்பட்டி மண்டலம் 31-வது வார்டு கோட்டை சின்னசாமி தெருவில் ரூ.3 கோடியே 51 லட்சம் மதிப்பில் உள்விளையாட்டு அரங்கம் அமைத்தல், வாகனம் நிறுத்துமிடம் போன்ற கட்டுமானப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளன. இந்த நிலையில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணிகளை நேற்று மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த விளையாட்டு அரங்கில் 5 இறகு பந்து தளம் அமைக்கப்பட்டுள்ளதையும், மேலும் உள் விளையாட்டு அரங்கில் குடி தண்ணீர் வசதி, ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக கழிப்பிட வசதி, ஓய்வறைகள், வாகன நிறுத்தும் இடங்களையும் பார்வையிட்டார். அப்போது பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். ஆய்வின்போது உதவி ஆணையாளர் மணிமொழி, உதவி செயற்பொறியாளர் சிபிசக்கரவர்த்தி, உதவி பொறியாளர் ரவிச்சந்திரன், மாவட்ட இறகு பந்து சங்க செயலாளர் வெங்கடேஷ், இறகு பந்து பயிற்சியாளர் கார்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story