புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம்


புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம்
x
தினத்தந்தி 26 Nov 2021 11:51 AM IST (Updated: 26 Nov 2021 11:51 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி அமைச்சரவை கூட்டம் முதல்-மந்திரி ரங்கசாமி தலைமையில் நடைபெற்றது.

புதுச்சேரி,

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் முதல்-மந்திரி ரங்கசாமி தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், தேனீ ஜெயக்குமார், சந்திர பிரியங்கா, தலைமைச் செயலர் அஸ்வனிகுமார் மற்றும் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.

புதுச்சேரியில் மின்துறை தனியார்மயமாக்கம், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்கள் 50 சதவீதம் பெறுதல், கரசூரில் தகவல் தொழில் நுட்ப பூங்காவுக்கு ஒதுக்கப்பட்ட இடஒதுக்கீட்டை மாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story